பிரமாண்ட விழாவை சொந்த ஊரில் நடத்தி அசத்திய தொழிலதிபர்
பிறந்த மண்ணை மறக்காமல் ஐந்தாயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட விழாவை சொந்த ஊரில் நடத்தி அசத்திய தொழிலதிபர்.
இளைஞர்களிடம் விளையாட்டு கொண்டு சேர்த்தால் போதை பழக்கத்த தடுக்க முடியும் என்பதற்கு எங்கள் கிராமமே உதாரணம் என தொழில் அதிபரும் தமிழ்நாடு தடகள சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவருமான பொன்னுசாமி கார்த்திக் பேட்டி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மலையரசன் குப்பத்தில் பிறந்த தொழிலதிபர் பொன்னுசாமி கார்த்திக் இவர்
சென்னையில் இளநீர் ஏற்றுமதி, கட்டுமான நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகின்றார்.
மேலும் தமிழ்நாடு தடகள சங்கத்தின் விழுப்புர மாவட்ட தலைவராக இருந்து வருகின்றார்.
இந்தநிலையில் தனது நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களுக்கான விருது வழங்கும் விழவினை தனது சொந்த ஊரில் மிக பிரமண்டமாக நடத்தி அசத்தி உள்ளார்.
விழாவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
விழாவை முன்னிட்டு சுற்று வட்டார கிராம இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் 2 நாள் மாபெரும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரு.2 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
இது குறித்து நம்ம ஃபேமிலி பில்டர் அண்ட் டெவலப்பர் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனர் பொன்னுசாமி கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசும்போது, பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தாலும் விவசாயத்தில் மிக அதிக ஆர்வம் உள்ளது.
எங்கள் கிராமத்தில் விவசாயத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
மேலும் தமிழகத்திலேயே ஆர்கானிக் விவசாயம் என்றால் அது மலையரசன் குப்பம் என்ற பெயர் எடுக்கும் வகையில் பணிகள் அமையும், விவசாயத்தை வெறும் வணிக நோக்கில் மட்டும் பார்க்க கூடாது என்றார்.
மேலும் விளையாட்டு மூலம் மாணவர்களிடம் போதைப் பழக்கத்தை ஒலிக்க முடியும் என்பதை எங்கள் கிராமத்திலே நாங்கள் நிரூபித்து காட்டியுள்ளோம் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பல இளைஞர்கள் தற்போது விளையாட்டில் ஆர்வம் காட்டி அந்த பழக்கத்திலிருந்து விலகி வந்துள்ளனர்.
எனவே ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று விளையாட்டுகளை ஆர்வம் செலுத்தினால் போதை பதக்கத்தை ஒழிக்க முடியும் என்றார்.