மாமன் செண்டிமெண்ட் வொர்க்அவுட் ஆகுமா? மாமன் Movie Review
கடந்த சில வருடங்களாக, நகைச்சுவை நடிகர் சூரி, விடுதலை மற்றும் கருடன் போன்ற படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி, தான் ஒரு திறமையான நடிகர் என்பதை மாமன்’ படத்தின் முலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி ஹீரோ…வாக நடித்த ‘மாமன்’ என்ற குடும்ப திரைப்படம் ரசிகர்களை ரசிக்க வைத்தா என்பதை பார்போம்.
Aishwarya Lekshmi, Swasika, Rajkiran, Prageeth Sivan, உள்ளிட நடிகர்கள் நடிக்க லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் கே. குமார் தயாரித்துள்ளார். சுவாரஸ்யமாக, கதையை சூரி எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
மாமா இன்பாவாக (சூரி) மருமகனாக நிலன் எனப்படும் லட்டு (பிரதீஷ் சிவன்), இன்பாவின் திருமணமான சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) பல ஆண்டுகளாக ஒரு குழந்தைக்காக பிரார்த்தனை செய்து வருகிறார், 10 ஆண்டுகளுக்கு பிறகு, குழந்தை பிறக்க இன்பா லட்டு மீதி அதிக பாசம் வைத்து வளர்கிறார்.
இன்பா மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் ரேகாவை (ஐஸ்வர்யா லெக்ஷ்மி) சந்திக்கிறார், காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளும் போது தான், லட்டு தனது மாமா இல்லாமல் தவிக்கிறார் குறிப்பாக இரவில், மாமா .. வுடன் லட்டு இருக்க நினைப்பதால் பிரச்சினைகள் தலை தூக்குகிறது.
ரேகாவுக்கும் இன்பாவுக்கும் இடையில் விரிச்சல் ஏற்பட, லட்டுவால் குடும்பதில் பதற்றம் அதிகரிக்கிறது. பிரச்சனை மாமனையும் மருமகனையும் எப்படி பிரிக்கிறது. குடும்பப் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன? என்பதே மீதி கதை .
மாமா மற்றும் லட்டு..வை சுற்றியே கதை நகர்கிறது. தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் துணையாக இருக்கும் இன்பா, தனது மனைவியைப் புறக்கணிப்பது ஆணாதிக்க மனநிலையை வலுப்படுத்துகிறது, பாடல்கள் இனிமையாக இருந்தாலும் மனதில் நிற்கவில்லை. இடைவெளியே இல்லாமல் பாடல்கள் வந்து சலிப்பை ஏற்படுத்துகிறது.
உணர்ச்சியையும் பாசத்தையும் கொட்டி நடித்திருக்கிறார் சூரி லட்டு…வாக வரும் பிரதீஷ் சிவன் குழந்தையாக இருந்தாலும் அழகாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் உணர்ச்சிகளை கொட்ட வேண்டிய இடத்திலும் கோபத்தை வெளிகாட்ட வேண்டிய இடத்திலும் நடிப்புக்கு வஞ்சனை இல்லாமல் அருமையாக நடித்திருக்கிறார்.
மற்ற Characters எல்லாம் சொல்லுவதிற்கு முன்பே Emotional Mood..இக்கு போய்டுராங்க சென்டிமென்ட் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும் செண்டிமெண்ட் மனதில் ஒட்டவில்லை படத்திற்கு ஃபைட் தேவை என்பதால் வலுக்கட்டயமாக ஃபைட் சீனை திணித்திருக்கிறார் இயக்குனர்.
சென்டிமென்ட் படம் என்பதால் ரசிகர்களை மறந்து கூட சிரிக்க கூடாது அழ வைக்க வேண்டும் என்பதிலேயே குறியாக கதையை நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர். இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின் ‘ஹீரோ’. இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறார், திரைப்படங்களில் வரும் பெண்களின் நிலை மாறாமல் இருப்பது போலவே, கதை எழுதிய விதமும் மாறாமல் உள்ளது.
சூரி குடும்ப உறவுகளை மையமாக வைத்து கதை எழுதி இருக்கிறார் அதற்காகவே பாராட்டலாம். விசு படம் பார்த்த Feel.