in

பல கோடி ஏல சீட்டு மோசடியில் தொழிலதிபர் கைது

பல கோடி ஏல சீட்டு மோசடியில் தொழிலதிபர் கைது

 

புதுச்சேரியில் பல கோடி ஏல சீட்டு மோசடியில் கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடமிருந்து கார் மற்றும் அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வைரமணி (57). இவர், 45 அடி சாலையில் பிரபல உடற்பயிற்சி கூடம் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரிடம் பதுச்சேரியை சேர்ந்தவர். முருகன் என்பவரும் கடந்த 2024ம் ஆண்டு அக். மாதம் முதல் சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். மாத சீட்டு முதிர்வடைந்த பின்னரும் முருகன் கட்டிய ரூ.25.25 லட்சம் சீட்டு பணத்தை வைரமணி கொடுக்கவில்லை. இதுகுறித்து பலமுறை அவர் கேட்டுள்ளார், அப்போது, வைரமணி பிறகு தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில், வைரமணி நடத்தி வந்த உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று முருகன் பார்த்தபோது உடற்பயிற்சி கூடம் மூடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் வைரமணி மற்றும் அவரது மகன் தேவா, மகள் தவமணி மற்றும் அவரிடம் பணியாற்றிய புஸ்பா, மணிமேகலை, பாலா ஆகியோர் மீது முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.

இதனிடையே கடந்த மாதம் 27ம் தேதி கோரிமேடு எல்லைப்பகுதியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிபிசிஐடி உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் 45 அடி சாலையில் இயங்கி வந்த உடற்பயிற்சி கூடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு கிடைக்கப்பட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றி சென்றனர். மேலும், கைது செய்யப்பட்ட வைரமணியின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களையும் பறிமுதல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்…..

What do you think?

 மலேசியாவில் பயிலும் நாட்டுப்புற கலைகள்

காலபைரவருக்கு கார்த்திகை மாத பைரவாஷ்டமி பூஜை