in

கலெக்டர் நினைவாக இரத்ததான நிகழ்வு

கலெக்டர் நினைவாக இரத்ததான நிகழ்வு

 

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழ ஊடுருவும் அணியினரால் படுகொலை செய்யப்பட்ட உதவி கலெக்டர் நினைவாக இரத்ததான நிகழ்வு!

இலங்கை வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னை நாள் துணுக்காய் உதவி கலெக்டர் அமரர் நா.நந்தகுமார் நினைவாக இரத்ததான நிகழ்வு இன்று துணுக்காய் கலெக்டர் செயலகத்தில் இடம்பெற்றது

துணுக்காய் கலெக்டர் செயலகத்தில் உதவி கலெக்டர் செயலாளராக பணியாற்றிய அமரர் நா.நந்தகுமார் அவர்கள் தனது கடமை நேரத்தின் போது இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டு இருந்த காலப்பகுதியில் 29.06.2008 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார்

அவரது நினைவு தினத்தை நினைவு கூறும் முகமாக வருடந் தோறும் துணுக்காய் உதவி கலெக்டர் செயலகத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் இந்த வருடமும் அவரது ஞாபகார்த்தமாக குறித்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

நிகழ்வில் அமரர் நந்தகுமார் அவர்களின் துணைவியார் திருவுருவப்படத்துக்கான மலர் மாலையினை அணிவித்தார் ,

தொடர்ந்து சுடரேற்றி அஞ்சலி இடம்பெற்ற பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின

மாவட்ட உதவி கலெக்டர் ராமதாஸ் ரமேஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச உதவி கலெக்டர் ஸ்ரீஜெயராம் நித்தியா மற்றும் உதவி கலெக்டர் அலுவலக உத்தியோகத்தர்கள் ,திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் அம்பலப்பெருமாள் குளம் தேக்கங்காடு பகுதியில் பணியின் நிமித்தம் சென்று வரும்போது இரானுவத்தினரின் மிலேச்சத்தனமான கிளைமோர் தாக்குதலில் அப்போதைய துணுக்காய் உதவி கலெக்டர் கடமையில் இருந்த நாகலிங்கம் நந்தகுமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளுக்கு அரச அதிகாரிகளும் இலக்காக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

What do you think?

Silent…டாக படத்தை முடித்த ஜேசன் சஞ்சய்

மேல்மருவத்தூரில் புதிய நியாய விலை கடை திறப்பு