காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தஞ்சாவூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து தஞ்சாவூரில் பாஜக கட்சி சார்பில் கீழவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மாவட்டத் தலைவர் ஜெய்சதிஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாஜக மயிலாடுதுறை மாவட்ட பார்வையாளர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், இந்திய ராணுவத்திற்கு துணை நிற்போம், ரபேல் விமானங்கள் பறக்கட்டும், இந்திய மக்களை பாதுகாப்போம் என்று கண்டன கோஷம் எழுப்பி பாஜகவினர் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.