in

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க கோரி புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க கோரி புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று இன்று நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி முழுவதும் வங்கி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து யூகோ வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த வேலை நிறுத்த போராட்டத்தில்
ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

தேசிய அளவில் 8 லட்சம் ஊழியர்களும் புதுச்சேரி அளவில் 2500 ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்..

இருப்பினும் HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.

What do you think?

பேராசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கினர்

மீண்டும் இணையும் ‘விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா’ ஜோடி