in

நெல்லை மாவட்ட நீதித்துறை சார்பில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி

நெல்லை மாவட்ட நீதித்துறை சார்பில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி நெல்லை சட்டக்கல்லூரியில் நடைபெற்றது. கல்வி வேலைவாய்ப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் முதலிடத்தில் இருப்பதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட நீதித்துறை சார்பில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழாப்புணர்வு கருத்தரங்கம் நெல்லை சட்டக்கல்லூரியில் மாவட்ட நீதிபதி சாய்சரவணன் தலைமையில் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் பத்மநாபன், பன்னீர்செல்வம், நெல்லை மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் விநோத்சாந்தாராம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பெண்களுக்கான அதிகாரங்கள் , முன்னுரிமைகள், பணி வாய்ப்புகள் குறித்து கருத்துரையாற்றினர் மேலும் கருத்தரங்கில் இந்திய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழக பெண்கள் முதலிடத்தில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் நீதித்துறையை சேர்ந்தவர்கள், பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

பெட்ரோல் – டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரியில் கசிவு

நீர்வீழ்ச்சியில் நடிகரின் உடல் சடலமாக மீட்பு