in

குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

டாக்டர் அம்பேத்கர் கூறிய கற்பி, ஒன்று சேர், புரட்சி செய், என்ற வாக்கிற்கு ஏற்ப மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்வில் கடலூர் மாவட்ட எஸ்.பி.மாணவர்களுக்கு அறிவுரை…

கடலூர் மாவட்டம், நெய்வேலி உட்கோட்டம் குறிஞ்சிப்பாடி காவல் நிலைய எல்லையில் குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருள் மற்றும் சாதிய பாகுபாடு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசுகையில்,

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே சாதிய பாகுபாடுகள் இருக்க கூடாது எனவும், குற்ற செயல்களில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள கூடாது எனவும், போதை பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகிவிட கூடாது எனவும் மாணவர்களுக்கு எஸ்.பி அறிவுரை கூறினார்.

மேலும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறிய கற்பி, ஒன்று சேர், புரட்சி செய், என்ற வாக்கிற்கு ஏற்ப மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் எனவும், பாரதியார் கூறிய சாதிகள் இல்லையடி பாப்பாடி என்ற வாசகங்களையும் மேற்கோள்காட்டி பேசினார்.

மேலும் மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும், எல்லோரும் ஒன்று சேர்ந்து நல்ல சமுதாயத்தினை உருவாக்க வேண்டும், தீமைக்கு எதிராக எல்லோரும் போராட வேண்டும் என அவர் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் போதை பழக்கம், சாதிய பாகுபாடு மற்றும் குற்ற செயலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி காவல் நிலைய ஆய்வாளர் மோகன் அய்யர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆனந்தகுமார், இராஜவேல், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

தாளமடை சுயம்பு கருப்பண்ணசாமி கோவிலில் மாபெரும் அன்னதானம்

நடிகர் மதன் பாபு ..விற்கு அஞ்சலி செலுத்த வராத மூத்த நடிகர்கள்