in

புதிய பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்திற்கு அனுமதி வழங்க ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

புதிய பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்திற்கு அனுமதி வழங்க ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருதரப்பு ஆட்டோ சங்கம் பேருந்து நிலையத்தில் வெவ்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தது இந்த நிலையில் ஒரு தரப்பினர் புதிய இடத்தில் ஆட்டோ நிறுத்தத்தை நிறுத்தியதால் மற்றொரு ஆட்டோ சங்கத் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பு கிடையே பிரச்சனை நிலவி வந்தது.

இரு தரப்பும் மாறி மாறி புகார் தெரிவித்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆட்டோ நிறுத்தத்திற்கு நகராட்சி அனுமதி இல்லை எனக் கூறி தேனி போலீசார் அந்த இடத்தில் பேரிக்காடுகளை வைத்து ஆட்டோ நிறுத்தத்தை அகற்றினர். இதனிடையே போலீசாரின் தடையை ஆட்டோ நிறுத்திய 9 நபர்களை கைது செய்து அவர்களின் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்க கோரி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆட்டோ நிறுத்தத்திற்கு அனுமதி தராததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட தங்கள் தரப்பு ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்க கோரியும்.

முன்பு இருந்தது போல் தங்களது ஆட்டோ நிறுத்தத்தை நிறுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

What do you think?

 பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்