in

தேனி அருகே 150 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை வெட்ட முயற்சி: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

தேனி அருகே 150 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை வெட்ட முயற்சி: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு பகுதியில், சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரத்தை வெட்ட வந்தவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி அருகே வீரபாண்டி – தப்புக்குண்டு சாலையில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்தப் பாதையில் பிரசித்தி பெற்ற சடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தப்புக்குண்டு, தாடிச்சேரி, உப்பார்பட்டி, வெங்கடாசலபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்தத் திருக்கோவில் வளாகத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்டமான அரச மரம் ஒன்று உள்ளது. இந்நிலையில், காற்றாலை மின்சாரக் கம்பிகள் கொண்டு செல்வதற்காக இடையூறாக இருப்பதாகக் கூறி, இந்த மரத்தை வெட்டுவதற்குச் சிலர் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நெடுஞ்சாலைத் துறை சார்பிலும் மரத்தை அகற்ற முற்பட்டதாகத் தெரிகிறது.

தகவலறிந்து கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “இந்த அரச மரம் ஆன்மீக ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்த புனித மரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது” எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

​மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பழமையான மரங்களைப் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

What do you think?

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் திருநாள்

குத்தாலத்தில்  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி