குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத முதல் பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தளமாகவும் திருமண தடை நீங்கும் தலமான இக்கோவில் பங்குனி மாத முதல் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திரவிய பொடி,மஞ்சள், தயிர்,பழச்சாறு,தேன்,பஞ்சாமிர்தம், பால்,இளநீர்,சந்தனம்,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மூலஸ்தான சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் பின்னர் பிரதோஷம்.
நாயனார் ரிஷப வாகனத்தில் ஆலய வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நந்தி பகவானையும் சிவபெருமானையும் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

