அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்
நாகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது புதிய அலுவலகத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் அண்ணதாஸ், நந்தகுமார், ரகுமான் ஷரீப், முகமது பக்ருதீன், மோகன் காந்தி, பிரசாந்த், கோபிநாத், காளிதாஸ் செல்லதுரை முத்து சுப்பிரமணி, நகரகழக செயலாளர் லிங்கேஸ்,முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


