போலி உரம் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குடோனை வேளாண் அதிகாரிகள் சீல்
தஞ்சையில் போலி உரம் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குடோனை வேளாண் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கடந்த 20ம் தேதி ஆட்டோவில் வைத்து உரம் விற்பனை செய்யப்பட்டு வந்தன
சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை மடக்கி உரத்தினை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் அந்த உரம் போலியானது என தெரிய வந்தது.
இதனை அடுத்து உரம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தஞ்சை மாவட்டம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள ஆனந்தராஜ் என்பவரது உரம் குடோனில் இருந்து எடுத்து வரப்பட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு செல்வராஜ் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் போலி உரம் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை சீல் வைத்தனர்.
மேலும் குடோனில் சுமார் ஐந்து டன் போலி உரம் இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலி உரம் தயாரித்து விற்பனை செய்த ஆனந்தராஜை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகள் வேளாண் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் போலி உரம் விற்பனையால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


