போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீகாந்த் அதிரடி கைது
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீகாந்த் கைது. சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கோகயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் என்பவரை கைது செய்து விசாரித்த போது பிரதீப் குமார் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்புபடுத்தினார்.
பிரதீப் பிரசாத்துக்கு 40 முறைக்கு மேல் போதைப்பொருள் சப்ளை செய்ததாகவும், ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பாதித்ததாகவும் கூறினார்.
அவருக்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஜான் சப்ளை செய்ததாக தெரியவந்ததை த்தொடர்ந்து ஜான் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அதிமுகவின் முன்னாள் ஐடி பிரிவு உறுப்பினரான பிரசாத், ஸ்ரீகாந்துக்கு கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த போதைப்பொருள் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வழியாக கடத்தப்பட்டதாக அறிக்கை வெளியானது.
ஜான் போதை பொருள் யார் யாருக்கு சப்ளை செய்தார் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில் சினிமாவை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்த் பெயரும் இருந்தது.
ஸ்ரீகாந்தை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்த போது Drugs பயன்படுத்தவில்லை என்று கூறினார் ஆனால்அவருக்கு போதை பொருள் அடிக்கடி சப்ளை செய்வதாக ஜான் கூறினார்.
சந்தேகம் அடைந்த போலீசார் சாளிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டை சோதனை இட்டதில் எதுவும் சிக்கவில்லை அதன் பிறகு அவருடைய ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது பரிசோதனையில் ஸ்ரீகாந்த் கோகோயின் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கோகை…னை ரூ.12,000க்கு வாங்கியதாக தெரியவந்துள்ளது.
ஸ்ரீகாந்த்தை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீகாந்த் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் போதை பொருள் வாங்கிருபது தெரிய வந்தது சென்னை எழும்பூர் கோட்டில் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நடிகர் ஸ்ரீகாந்த் ஜூலை ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்திரவிடப்பட்டது.
நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் முதல் வகுப்பு வேண்டும் என்று கேட்டவருக்கு முதல் வகுப்பு அறை கொடுக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்தியது.


