90…ராவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை M.N.Rajam
பழம்பெரும் நடிகை M.N.Rajam அம்மா 1950 மற்றும் 60களில் முன்னனி நடிகையாக ஜொலித்தவர் கண்களாலேயே வில்லத்தனம் காட்டி மிரட்டி விடுவார்.
200 படங்களுக்கு மேல் நடித்தவர் வயது மூப்பு காரணமாக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகை M.N.Rajam .. அம்மாவிற்கு நேற்று 90…ராவது பிறந்தநாள் விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர்.
அந்த விழாவில் எம் என் ராஜம் அவர்களின் மகன், மருமகள், பேரன், பேத்தி ,மற்றும் பணியாட்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மாவை மகிழ்ச்சியில் திக்குமுக்கு..ஆட வைத்துவிட்டனர்.
விழாவின் போது அம்மா சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார். ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நான் அறிமுகமானேன் அன்று முதல் இன்று வரை என்னை தன் சொந்த சகோதரி போல ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
மேலும் எனக்கு ஒரு நல்ல குடும்பம் அமைந்தது எனது பாக்கியம் வயதாகிவிட்டாலே ஒதுக்கிவிடும் இந்த காலத்தில் என்னை அக்கறையாக என் மகனும் மருமகளும் கவனிப்பது எனக்கு பெரும் பாக்கியம்.
நான் சிறு வயதிலேயே சினிமாவிற்கு நுழைந்து விட்டதால் என்னால் படிக்க முடியவில்லை ஆனால் இப்பொழுது சினிமாவிற்கு வருபவர்கள் நன்கு படித்தவர்கள் அதனால் அவர்கள் நடிக்கவும் செய்யட்டும் அரசியலும் செய்யட்டும் இதில் நான் கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
என் குடும்பம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை எத்தனையோ முறை நான் பார்த்திருக்கிறேன் பேசியிருகிறேன் ஆனால் முதலமைச்சரான பிறகு அவரை ஒரு முறை பார்க்க வேண்டும் சீக்கிரம் அது நடைபெறும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.


