கேள்வி கேட்ட பொதுமக்களை கண்டபடி திட்டி அடிக்கப் பாய்ஞ்சிருக்காரு நடிகர் சித்தார்த் பிரபு
மலையாள டிவி சீரியல்கள்ல நடிச்சு ரொம்ப ஃபேமஸானவர் நடிகர் சித்தார்த் பிரபு.
இவர் நேத்து ராத்திரி செய்த காரியம் இப்போ கேரளாவுல பெரிய சர்ச்சையாகி இருக்கு.
கோட்டயத்துல இருந்து சித்தார்த் பிரபு கார்ல வந்துட்டு இருந்தப்போ, திடீர்னு அவரோட கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமா நடந்து போயிட்டு இருந்த ஒரு லாட்டரி வியாபாரி மேல பயங்கரமா மோதிடுச்சு. அந்த வியாபாரி தூக்கி வீசப்பட்டு இருக்காரு.
சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், விபத்து ஏற்படுத்தின சித்தார்த் பிரபுவைப் பிடிச்சு கேள்வி கேட்டுருக்காங்க. அப்போதான் தெரிஞ்சது அவர் மட்டை ஆகுற அளவுக்குக் குடிச்சிருக்காருன்னு!
தப்பு பண்ணிட்டு அமைதியா இல்லாம, கேள்வி கேட்ட பொதுமக்களை கண்டபடி திட்டி அடிக்கப் பாய்ஞ்சிருக்காரு.
விஷயம் தெரிஞ்சு வந்த போலீஸ்காரங்க அவரைத் தடுக்க முயன்றப்போ, அவங்களையும் நடிகர் அடிச்சுத் துவம்சம் பண்ணதா சொல்லப்படுது. இதனால அந்த இடமே கொஞ்ச நேரம் போர்க்களம் மாதிரி ஆகிடுச்சு.
உடனே அவரை அலேக்கா தூக்கிட்டுப் போன போலீசார், மெடிக்கல் செக்கப் பண்ணிட்டு இப்போ அவரை அரெஸ்ட் பண்ணிருக்காங்க.
விபத்துல காயமான லாட்டரி வியாபாரி இப்போ ஆஸ்பத்திரில சீரியஸான நிலைமையில இருக்காரு. திரையில நல்லவரா நடிக்குற நடிகர்கள், நிஜ வாழ்க்கையில இப்படிப் பொறுப்பில்லாம நடந்துக்குறது ரசிகர்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு.


