மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார்
பத்ம பூஷண் விருது வழங்கப்பட்ட பின்னர் நடிகர் அஜித் புது தில்லியில் இருந்து சென்னை திரும்பியவுடன் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்.
நடிகர் அஜித் குமார் புதன்கிழமை காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
“சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலால் அஜித்குமார் காலில் சிறிய காயம் ஏற்பட்டது. அவர் பிசியோதெரபிக்காக அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.
நடிகர் நேற்று மாலை நலமுடன் வீடு திரும்பினார்.
அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்று அறிக்கை வெளியிடபட்டுள்ளது .
அஜித்குமார் 54வது பிறந்த நாளைக் இன்று கொண்டாவுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.