செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவில் கார்த்திகை திருவாதிரை அபிஷேகம்
உலகின் முதல் நடராஜர் விக்ரகம் அமைந்துள்ள நெல்லை மாவட்டம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவிலில் கார்த்திகை திருவாதிரை அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் அடுத்த அழகிய கூத்தர் திருக்கோவிலில் உலகின் முதல் நடராஜர் விக்ரகம் அமைந்துள்ளது.
இத்தகைய பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் கார்த்திகை திருவாதிரை நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அழகிய கூத்தருக்கு சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து கோவிலில் அமைந்துள்ள யாகசாலையில் சிறப்பு யாகமும் நடைபெற்றது.

தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு பால் மஞ்சள் தயிர் இளநீர் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் ஒன்று சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்வாடச உபச்சார மகா தீபாராதனையும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


