in

பாஜக. சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்) குறித்து பயிலரங்க மாநாடு

பாஜக. சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்) குறித்து பயிலரங்க மாநாடு

 

செஞ்சி சட்ட மன்ற தொகுதி பாஜக. சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்) குறித்து பயிலரங்க – மாநாடு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி பாஜக. சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாஜக வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது..

வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு பயிலரங்க கூட்டம் பாஜகவின் செஞ்சி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் வி.பி.என்.கோபிநாத்
தலைமையில் மாவட்ட செயலர் சிவகாமி வரவேற்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் கே.ஆர்.விநாயகம், மாவட்ட பொதுச்செயலர் கே.பாண்டியன் முன்னிலை ஏற்று சிறப்புரையாற்றினர்.

மேலும் பயிலரங்கம் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு முதல் அமர்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பாஜகவின் இணை அமைப்பாளர் அன்பழகன் எஸ் ஐ ஆர் பணிகளை அமைப்பு ரீதியாக எப்படி பயன்படுத்த வேண்டும் என விளக்கி கூறினார்.

இரண்டாவது அமர்வில் பேசிய ரங்கராஜன் எஸ் ஐ ஆர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்ட்டுள்ளதாக என கவனமுடன் பார்க்க வேண்டும், திமுகவினர் கள்ள வாக்குகளை சேர்க்க முயற்சித்து வருவதாக தெரிகிறது, இதை விழிப்புடன் இருந்து விரைவில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை பார்த்து அப்படி கள்ள வாக்குகள் இருந்தால் அதை நீக்க முயற்சி செய்ய வேண்டும் என கூறினார்.

மூன்றாது அமர்வில் பேசிய முன்னாள் எம்எல்ஏ.வி.ஏ.டி.கலிவரதன் திமுக. கருணாநிதி காலத்தில் இருந்து எப்படி வளர்ந்தது எனவும், திமுகவின் ஊழல் குறித்து வாக்களர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், திமுவில் துறை ரீதியாக நடைபெற்று வரும் ஊழல் குறித்தும், நிர்வாக சீர்கேட்டை விளக்கி கூறியும், ஊழல் மூலமே ஆட்சி செய்யும் திமுகவும், ஊழலே செய்யாமல் ஆட்சி நடத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு குறித்தும், அதன் சாதனைகளையும் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் மாவட்ட துணை தலைவர்கள் என்.ஏ.ஏழுமலை, ராதே, கோகுல், விஜயலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சரவணன், ஸ்ரீரங்கன், தங்க.ராமு, மேகலா, ஞானமணி, ஏழுமலை, அசோக்குமார், சரவணன், பிரசண்ணா உள்ளிட்ட வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்செய்த நடிகர் யோகிபாபு….

நாமக்கல் ஆஞ்சிநேயருக்கு இலட்சத்து 8 வடை மாலை தயாரிக்கும் பணி துவக்கம்