சைக்கிளை ஓட்டி கொண்டே இரு கைகளாலும் சிலம்பம் சுற்றி அசத்தும் கூமாபட்டி இளைஞர் மணிமுத்துவின் வீடியோ வைரல்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து. இவர் சிலம்பம் சுற்றுவதில் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார்.
மேலும் இலவசமாக மாணவர்களுக்கு சிலம்பம் சுற்றுவதை கற்றுக் கொடுப்பது, கபடி பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.இந்த நிலையில் மணிமுத்து கான்சாபுரம் முதல் வ.புதுப்பட்டி சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே இரு கைகளாலும் சிலம்பம் சுற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


