in

தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில்  பயிற்சி முகாம் நடைபெற்றது

தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில்  பயிற்சி முகாம் நடைபெற்றது

தேனி மாவட்டத்தில் தேனி மாவட்ட கிக் பாக்சிங் அசோசியன் செயல் பட்டு வருகிறது .மேலும் இந்த அசோசியன் சார்பில் தேனி மாவட்டத்தில் எண்ணற்ற வீரர்களை உருவாக்கி பயிற்சிகள் அளித்து பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனியில் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியன்ஸ் மற்றும் தேனி மாவட்ட பாக்ஸிங் அசோசியன் இணைந்து கிக் பாக்ஸிங் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

 

இந்த பயிற்சியில் விளையாட்டு வீரர்களாக இருந்து பயிற்சியாளராக மாறியுள்ள நபர்களுக்கு போட்டிகளின் போது வீரர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிப்பது எப்படி என்பது குறித்தும், விரிவான ஆலோசனைகள் பயிற்சியுடன் கூடிய நடைமுறைகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்தப் போட்டிகளின் போது நடுவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தீர்ப்பு வழங்கும் முறைகள் குறித்தும் ஆலோசனை நிகழ்த்தப்பட்டது.

இந்த பயிற்சியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த பயிற்சியின்போது தனித்தனியே நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி குறித்து பயிற்சியாளர் கூறும் பொழுது தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அணியின் பயிற்சியாளர் கூறும் பொழுது தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் அசோசியன் ஒத்துழைப்புடன் இந்து முகாம் பயிற்சியாளர் மற்றும் நடுவர்களுக்கு சிறப்பாக முறையில் நடைபெற்று வருகிறது

இந்த பயிற்சியில் தகுதி பெரும் நபர்களுக்கு வரவிருக்கும் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடுவர்களாகவும் பயிற்சியாளர்களாகவும் செயல்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் இந்த பயிற்சி முகாமில் பயிற்சியாளர்கள் நடுவர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்

What do you think?

தனியார் மருத்துவமனைக்கு நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து 

புதுச்சேரி காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடைபெற்ற உடற் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் ஊழல்