in

தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

 

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்றது விளையாட்டு வீரர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த 32 வீரர்கள் ரோலர் ஸ்கேட்டிங், இன்லைன் ஸ்கேட்டிங் உள்ளிட்ட போட்டிகளில் பெண்கள் மற்றும் சீனியர் ஆண்கள் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனை யோகிதா மற்றும் பயிற்சியாளர் அலெக்ஸ் கூறுகையில்:

தென்கொரியாவில் நடைபெற்ற ஏசியின் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வந்துள்ளோம். எட்டு நாடுகள் பங்கேற்ற போட்டியில் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளோம், சீனியர் ஆண்கள் பிரிவு வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

இதற்கு முன்பு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் சைனாவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் வெண்கலம் வென்றுள்ளோம் தற்போது தங்கம் வென்றுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சி உள்ளது அதற்காக வலிமைதான் அனைவருக்கும் நன்றி.

What do you think?

குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் திருக்கல்யாணம் விழா

சல்மான் கானின் மான் வேட்டை வழக்கில் திடிர் திருப்பம்