கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருபுவனத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எம்ஜிஆர் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் சன்னதி தெருவில் மாவட்ட செயலாளர் பாரதிமோகன், தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், அசோக்குமார், சோழபுரம் அறிவழகன், அழகு த சின்னையன், கருணாநிதி, தலைமை கழக பேச்சாளர்கள் குலாப்ஜான், தில்லைசெல்வம் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய போது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார் வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதியில் நகரத்தில் உள்ள வீடு இல்லாத மக்களுக்கும் இடம் வாங்கி அடுக்குமாடி வீடு கட்டி கொடுப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நாங்கள் சொன்னா கண்டிப்பாக செய்வோம் என்றவர், இது ட்ரையலர் தான் இன்னும் இன்னும் நிறைய திட்டங்களை எடப்பாடி அறிவிக்க உள்ளார் என்றார். தீபாவளிக்கு அண்டா குண்டா கொடுத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகுவார் அது எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசியாக இருந்த வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்தனர் .


