மிஷ்கின் படம்னாலே ஒரு தனி ‘டார்க் திரில்லர்’
மிஷ்கின் படம்னாலே ஒரு தனி ஸ்டைல் இருக்கும். அதுவும் விஜய் சேதுபதி கூட சேரும் போது எதிர்பார்ப்பு சும்மா எகிறி கிடக்கு.
யாரெல்லாம் நடிக்கிறாங்க?: விஜய் சேதுபதி கூட சேர்ந்து சுருதிஹாசன் மற்றும் ‘கைதி’ நரேன் முக்கிய ரோல்ல நடிச்சிருக்காங்க.
இது ஒரு ‘டார்க் திரில்லர்’ படம்.
கதை முழுக்க ஒரே ஒரு நைட்ல, ஒரு ட்ரெயின்ல நடக்குற சம்பவங்களை வச்சு விறுவிறுப்பா நகருமாம். இந்தப் படத்துக்கு மிஷ்கினே தான் மியூசிக் போட்டிருக்காரு.
அதுமட்டும் இல்லாம, சுருதிஹாசன் இதுல ஒரு பாட்டு பாடியிருக்காங்களாம். படத்தோட சூட்டிங் எல்லாம் ஏற்கனவே முடிஞ்சு இப்போ ரிலீஸ்க்கு ரெடியாகிட்டு இருக்கு.
இப்போ தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஒரு சூப்பர் நியூஸ் சொல்லிருக்காரு.
இன்னும் 48 மணி நேரத்துல (அடுத்த ரெண்டு நாள்ல) படத்தோட முதல் பாட்டு ரிலீஸ் ஆகப்போகுது! கலைப்புலி எஸ். தாணுவோட ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்புல வர்றதுனால, படத்தோட புரமோஷன் இனிமே பயங்கரமா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.


