லட்டு பிரசாத டோக்கன் வழங்க திருமலையில் உள்ள லட்டு கவுண்டரில் இயந்திரம் ஏற்பாடு.
லட்டு கிஷோக் மெஷின் என்ற பெயரில் லட்டு பிரசாத டோக்கன்களை பக்தர்களுக்கு வழங்க மூன்று இயந்திரங்களை திருப்பதி மலையில் உள்ள லட்டு கவுண்டரில் தேவஸ்தான நிர்வாகம் பொருத்தியுள்ளது.
பக்தர்கள் சாமி கும்பிட்டு முடித்த பின் தங்கள் டிக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள நம்பரை அந்த இயந்திரத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து டிக்கெட்களுக்கு உரிய இலவச லட்டுகளை வாங்குவதற்கு தேவையான ரசீது அந்த இயந்திரத்தில் இருந்து வெளியில் வரும்.
அந்த ரசீதை கவுண்டரில் காண்பித்து பக்தர்கள் தங்களுக்கு உரிய லட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம்.
ஆதார் எண் அடிப்படையில் லட்டு பிரசாதம் வாங்க விரும்பும் பக்தர்கள் அதற்குரிய ஆப்ஷனை தேர்வு செய்து தங்களுடைய ஆதார் நம்பரை லட்டு கிஷோக் எந்திரத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து ஒரு ஆதார் அட்டைக்கு இரண்டு லட்டுக்கள் என்ற அடிப்படையில் பணம் செலுத்துவதற்கு தேவையான கியூ ஆர் கோட் ரசீது எந்திரத்தில் இருந்து வெளியில் வரும்.
அந்த ரசீதை பக்தர்கள் தங்கள் மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்து யு பி ஐ பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து ஒரு ஆதார் அட்டைக்கு இரண்டு என்று அடிப்படையில் லட்டு வாங்க தேவையான ரசீது எந்திரத்தில் இருந்து வரும்.
அதனை எடுத்து சென்று லட்டு கவுண்டரில் கொடுத்து பக்தர்கள் லட்டு பிரசாதங்களை வாங்கிக் கொள்ளலாம்.