in

பரிமளரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு

பரிமளரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு

மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ளது பரிமளரெங்கநாதர் கோயில்,பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோயில்களில் இது,ஐந்தாவது கோயிலாகும் இங்கு திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம்,சந்திரனின் சாபம் தீர்த்ததும்,108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமான இந்த ஆலயத்தில் மட்டையடி உற்சவம் நடைபெற்றது.
    முன்னதாக பெருமாள் ஊடல் கொண்டு தாயார் சன்னதிக்கு செல்லும்போது,தாயார் கதவை அடைத்து,பெருமாளை வாழை மட்டையால் அடித்து கோபித்து திருப்பி அனுப்பும் வைபவம் ஆகும், இது பின்னர் சமாதானம் அடைந்து சேர்த்தி சேவையாக மாறும் ஒரு பாரம்பரிய உற்சவம் திருஇந்தளூர் போன்ற கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது,

இது பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடாகும் இத்தகைய சிறப்புடைய உற்சவத்தை திரளான பக்தர்கள் வந்து கண்டு களித்து பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.

What do you think?

“தங்கத்துல டாய்லெட்டா?” பச்சன் வீட்டு ஆடம்பரத்தைப் பார்த்து மிரண்டு போன நடிகர் விஜய் வர்மா!

வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவிக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது