கனமழையால் வேரோடு சாய்ந்த பெரிய வேப்பமரம்
வேலம் புதுக்குடி நீல வேலி சாலை ஓரம் பெரிய வேப்பமரம் கனமழையால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது இதனால் பல மின்கம்பங்கள் சேதம் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது வீட்டில் மின் இணைப்புகள் சேதம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் வேலம் புதுக்குடி நீலவேலி பகுதியில் சாலை ஓரமாக இருந்த பெரிய வேப்பமரம் ஒன்று நேற்று பெய்த கனமழை காற்று காரணமாக வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அவற்றை வெட்டி அகற்றும் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த விழுந்த வேப்பமரம் மூன்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதம் மின் கம்பிகள் அறுந்து சாலையில் கிடந்தது.

மேலும் பல வீடுகளில் மின் இணைப்புகள் அறுந்து சேதமடைந்தது அப்பகுதியில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.


