ஆஷாட நவராத்திரி விழாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியில், மெய்மறந்து மேடையில் ஏறி நடனம் ஆடிய சிறுமி.
புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் துபாய், வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை காண ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

முதல் முறையாக உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் நாட்டியம் ஆடியது வாழ்நாள் மறக்க முடியாத அனுபவத்தை அளித்ததாக கலைஞர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சி பார்வையாளராக வந்த 5 வயது சிறுமி தன்னை மறந்து மேடையில் ஏறி இசைக்கு ஏற்ப நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


