மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வாயிலில் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஹாலில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 2000க்கும் மேற்பட்டோர் பயன் பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் ஊழியர்களின் குடும்பத்தார்கள் பாலிசிதாரர்கள் பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.
மருத்துவ முகாமில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தமிழ்நாடு சீனியர் பிசினஸ் ஹெட் பாலாஜி பாபு, வாசன் கண் மருத்துவமனை CEO கமல் பாபு, இன்சூரன்ஸ் நிறுவன மதுரை மண்டல தலைமை அதிகாரி வினோத் பால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கண் சிகிச்சை முகாமில் பயன் பெற்ற அனைவருக்கும் இலவசமாக சர்க்கரை பரிசோனை, இரத்த அழுத்த பரிசோதனை, கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, கண் கண்ணாடி பரிசோதனை, கிட்ட பார்வை, தூர பார்வை பரிசோதனை உள்ளிட்டவைகள் இலவசமாக செய்யப்பட்டது.
மேலும் முகாமில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பேருக்கும் 4500 ரூபாய் மதிப்பிலான கண் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.
கேட்ராக்ட் கண் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு ரூபாய் 5000 மதிப்பிலான முழு பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது.
அனைத்து பரிசோதனைகளும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக செய்யப்பட்டது.


