in

மழை வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதிக்குள் வந்த 200 கிலோ எடையுள்ள முதலை

மழை வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதிக்குள் வந்த 200 கிலோ எடையுள்ள முதலை

 

சேத்தியாத்தோப்பு அருகே மழை வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதிக்குள் வந்த 200 கிலோ எடையுள்ள முதலை

ஒருவாரகாலமாக கிராமமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்தநிலையிலதனியார் குளத்தில் இருந்து பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

முதலைகளுக்கான நிரந்தர வாழ்விடங்களை உருவாக்காமல் அரசும், அதிகாரிகளும் காலங்கடத்துவதாக மக்கள் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தட்டானோடை கிராமம் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு டிட்வா மழை வெள்ளத்தின்போது அதிகளவில் மழைவெள்ளநீர் இப்பகுதியின் வயல்வெளிப்பகுதிகள், வடிகால் ஓடைகளில் மழைவெள்ள நீர் சூழ்ந்து தேங்கியிருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த மழைவெள்ள நீரில் எங்கிருந்தோ மூன்றுக்குமேற்பட்ட முதலைகள் அடித்து வரப்பட்டதாக வயல்பகுதிகளுக்குள் சென்று பார்த்த விவசாயிகள் பலரிடமும் தகவல் தெரிவித்தனர்.

இதனால் விவசாயிகள் எந்த நேரத்தில் என்னாகுமோ என தங்களது விவசாயப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் வேதனையும், அச்சமும் அடைந்தனர். மேலும் கிராமத்து மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள் தெருக்களில் அச்சத்தோடு நடமாடி வந்தனர்.

இதுகுறித்து தங்களது பகுதியில் முதலை வந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இதற்கு பிறகு வந்த விருத்தாசலம் வனத்துறையினர் சில நாட்களுக்குபின் முதலை ஒன்று தனியார் மீன்வளர்ப்பு குளத்தில் இருப்பதை அறிந்து அதனை வலைவீசி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது பல மணிநேர தேடுதலுக்கு பிறகு முதலை பிடிபட்டது. முதலையானது ஆறடி நீளமும் சுமார் 200 கிலோ எடையும்கொண்ட முதலையாக அது இருந்தது. இதனை அங்கிருந்து வனத்துறையினர் எடுத்துச்சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளும்,கிராமமக்களும் குறிப்பிடும்போது இப்பகுதிக்குள் மூன்று முதலைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு முதலை பிடிபட்டுள்ளது. மற்ற முதலைகள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

மேலும் அரசும் , அரசின் அதிகாரிகளும் முதலைகளை பாதுகாப்பான வசிப்பிடங்களில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அல்லது பாதுகாப்பான நிரந்தர இருப்பிடங்களை உருவாக்க வேண்டும்.

இல்லை என்றால் அவை இப்படிதான் கிராமப்பகுதிக்குள் வரும் எனவும் வேதனையோடு குறிப்பிட்டு மற்ற முதலைகளை பிடிப்பது எப்போது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

What do you think?

வள்ளியூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம்

திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரத போராட்டம்