in

 ஸ்பெயினில் அஜித்தின் ரேசிங் அதிரடி! Le Mans Cup2026 களமிறங்கும் AK அணி!


Watch – YouTube Click

 ஸ்பெயினில் அஜித்தின் ரேசிங் அதிரடி! Le Mans Cup2026 களமிறங்கும் AK அணி!

 

தமிழ் சினிமாவோட ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் குமார், இப்போ சினிமாவையும் தாண்டி ஒரு நிஜமான ரேசிங் ஹீரோவா உலகத்தையே திரும்பிப் பார்க்க வச்சிருக்காரு.

‘குட் பேட் அக்லி’ பட வேலைகளை முடிச்ச கையோட, மனுஷன் மொத்தமா கார் ரேசிங்ல இறங்கிட்டாரு.சும்மா ஆசைக்கு ரேஸ் ஓட்டாம, ‘Ajith Kumar Racing’னு தனியா ஒரு டீமே ஆரம்பிச்சு இப்போ துபாய், ஸ்பெயின், அபுதாபினு உலக நாடுகளைச் சுத்தி சுத்தி வர்றாரு நம்ம தல. சமீபத்துல நடந்த ’24H Series European Championship’ தொடர்ல, பல ஜாம்பவான்கள் நடுவுல அஜித்தோட டீம் 9-வது இடத்தை பிடிச்சு ஒரு பெரிய சாதனையை செஞ்சிருக்காங்க!

அடுத்ததா இப்போ ஸ்பெயின் நாட்டுல நடக்கப்போற ‘Le Mans Cup’ தொடர்ல அஜித் டீம் களமிறங்கப் போறாங்க. இது சாதாரண ரேஸ் இல்லங்க, டிரைவரோட பொறுமையையும் சக்தியையும் சோதிக்கிற ‘Endurance Racing’!

இதோட அட்டவணை இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு: ஏப்ரல் 8, 10 மற்றும் 14-ஆம் தேதிகள்ல நடக்கப்போற இந்த முக்கியமான போட்டிகள்ல அஜித் குமார் பங்கேற்கப்போறாரு.

இது மட்டும் இல்லாம, வர்ற ஜனவரி மாசம் வரைக்கும் வரிசையா பல சர்வதேச போட்டிகள்ல கலந்துக்க அஜித் பிளான் பண்ணிருக்காரு. ஒரு நடிகரா மட்டும் இல்லாம, ஒரு புரொபஷனல் ரேஸரா இந்தியாவை உலக மேடையில முன்னிறுத்துற அஜித்தோட இந்த ஆர்வம் ரசிகர்களுக்குப் பெரிய பெருமையைக் கொடுத்திருக்கு.

சமூக வலைதளங்கள்ல ரசிகர்கள் “ரியல் ஹீரோ”ன்னு கொண்டாடினாலும், இன்னொரு பக்கம் “தல எப்போ முழு நேரமா சினிமாவுக்கு வருவாரு?”ங்கிற எதிர்பார்ப்பும் அதிகமா இருக்கு.

எது எப்படியோ, தான் விரும்புற துறையில இவ்வளவு அர்ப்பணிப்போட இருக்குற அஜித்தோட இந்த வேகம் உண்மையிலேயே மிரட்டல் தான்!

அஜித்தோட இந்த ரேசிங் பயணம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? அவர் அடுத்த ரேஸ்ல ஜெயிப்பாரா? கமெண்ட்ல சொல்லுங்க! முழு விவரங்களுக்கு வீடியோவை பாருங்க!


Watch – YouTube Click Shorts

What do you think?

சஷ்டி கிளினிக் மற்றும் வசந்தா ரத்த பரிசோதனை நிலையம் இணைந்து நடத்தும் சர்க்கரை நோய் நீரிழிவு பரிசோதனை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மஞ்சு வாரியருக்கு நேர்ந்த பகீர் சம்பவம்! ரசிகையின் அத்துமீறல், அலறிய செக்யூரிட்டி!