in

ஆபாசப் பாடல்.. நோரா ஃபதேஹி வீடியோவால் பரபரப்பு மன்னிப்பு கேட்ட ’KD’ படக்குழு!

Watch – YouTube Click

ஆபாசப் பாடல்.. நோரா ஃபதேஹி வீடியோவால் பரபரப்பு
மன்னிப்பு கேட்ட ’KD’ படக்குழு!

கன்னடத்துல துருவா சர்ஜா நடிப்பில், பிரேம் டைரக்ஷன்ல உருவாகிட்டு இருக்குற ‘கே.டி. தி டெவில்’ (KD: The Devil) படம், ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே ஒரு பெரிய ‘பாடல்’ பஞ்சாயத்துல சிக்கியிருக்கு.

சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டினு பெரிய ஸ்டார்ஸ் இருக்குற இந்தப் படத்துல வந்த ஒரு பாட்டு தான் இப்போ மொத்த இந்தியாவையும் அதிர வச்சிருக்கு!இந்தப் படத்துல நோரா ஃபதேஹி ஆடுன ‘Sarke Chunar’ (தமிழில்:

திற நீ எந்தன் தரணி) பாட்டு ரிலீஸ் ஆனப்பவே, அதுல இருக்குற வரிகள் ரொம்ப ‘டபுள் மீனிங்’ல (ஆபாசமா) இருக்குன்னு புகார் எழுந்துச்சு.

டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்ல இருந்து பாட்டு வரிகள் வரை எல்லாமே தப்பா இருக்குன்னு சோசியல் மீடியாவுல எல்லாரும் வறுத்தெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

சினிமா யூனியன்ல இருந்து சமூக ஆர்வலர்கள் வரை எல்லாரும் சைபர் செcrime-ல புகார் கொடுத்தாங்க.

நிலைமை சீரியஸானதும், யூடியூப் மற்றும் எல்லா மியூசிக் பிளாட்ஃபார்ம்ல இருந்தும் அந்தப் பாட்டை மொத்தமா தூக்கிட்டாங்க.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வரைக்கும் இந்த மேட்டர் போனது தான் படக்குழுவுக்கு பெரிய ஷாக்!விஷயம் பெருசானதும், அந்தப் பாட்டுல ஆடுன நோரா ஃபதேஹி இப்போ தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஒரு வீடியோ போட்டிருக்காங்க.

“தெரியாம தப்பு நடந்துருச்சு, யாரையும் புண்படுத்துறது எங்க நோக்கமில்லை, மன்னிச்சிருங்க”னு அவங்க உருக்கமா மன்னிப்பு கேட்டிருக்காங்க.படக்குழுவும் இப்போ பணிஞ்சு வந்திருக்காங்க.

ஆபாசமான வரிகளை எல்லாம் தூக்கிட்டு, ‘சுத்தமான’ வரிகளோட அந்தப் பாட்டோட புது வெர்ஷனை ரிலீஸ் பண்ணப் போறாங்களாம். கூடவே ஒரு பகிரங்க மன்னிப்பு அறிக்கையும் கொடுக்கப் போறாங்க.

படம் வர்றதுக்கு முன்னாடியே இப்படி ஒரு சர்ச்சையில சிக்கினாலும், ‘மன்னிப்பு’ மூலமா நிலைமையைச் சமாளிக்கப் பார்க்குது ‘கே.டி.’ படக்குழு!

What do you think?

ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் சிவன் திருக்கோயில் தரமற்ற முறையில் கட்டுமான பணி – பக்தர்கள் அதிருப்தி.

திமுகவிற்கு சாதகமாக செயல்படும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்யக்கோரி பாஜக சார்பில் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்.