in

அரசுக்கு சொந்தமான மகளிர் சுய உதவி குழு கல்குவாரி செயல்பட தடையால் – 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிப்பு.

அரசுக்கு சொந்தமான மகளிர் சுய உதவி குழு கல்குவாரி செயல்பட தடையால் – 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிப்பு.

கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயக்கவுண்டன்பட்டியில் அரசுக்கு சொந்தமான சங்கிலிக்கரடு கல்குவாரி செயல்பட்டு வருகிறது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கல்குவாரி பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்

இந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக கல்குவாரி செயல்படுவதற்கான உரிமத்தை மாவட்ட நிர்வாகம் வழங்காததால் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.

சி சார்பில் கல்குவாரி தொழிலாளர்கள் அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆறு மாத காலமாக கல்குவாரி செயல்படுவதற்கு தடை விதித்திருப்பதால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் சுமை அதிகரித்து இருப்பதாகும் அதனை நம்பி இருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அகிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்குவாரியை மீண்டும் செயல்படுவதற்காக உரிமத்தை மகளிர் சுய உதவி குழுவிற்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் ஏஐடியூசி தொழிலாளர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

What do you think?

மதுரையில் 100% வாக்கு அளிக்க வலியுறுத்தி விழிப்பேணர்வு இருச்சக்கர வாகன பேரணி.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் சிவன் திருக்கோயில் தரமற்ற முறையில் கட்டுமான பணி – பக்தர்கள் அதிருப்தி.