- கட்டிட வேலைக்கு சென்ற கூலி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டகள்.
புதுவை காராமணிக்குப்பம் நல்லாண்ட மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் மதுரை மோகன், இவரது மகன் பிரகதீஸ்வரன் (எ) பிரவீன்குமார் (வயது 42) கூலி தொழிலாளி. கட்டிட வேலை உள்பட கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த 14ம் தேதி இவரது வீட்டிற்கு வந்த மேஸ்திரி முருகன் என்பவர் அவரை அவரச வேலை இருப்பதாகவும், வந்து செய்து கொடுத்துவிட்டு செல்லுமாறும் கூறி அழைத்து சென்றுள்ளார்.
மறுநாள் பெரியக்கடை போலீசார் அவரது பெற்றோருக்கு போன் செய்து, பிரவீன்குமார் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதி்ர்ச்சியடைந்த குடும்பத்தினர் புதுவை அரசு மருத்துவமனை விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனை முடிந்தும் இதுவரை உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேஸ்திரி முருகன், கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், கடந்த நாட்களாக போலீசார் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி பெரிய கடை காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


