சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார்.
சிலிண்டர் விலை உயர்ந்தாலும் அறிவித்தபடி 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்: – தவெக சி டி ஆர் நிர்மல் குமார்.
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் பரவலை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்களான தங்கப்பாண்டி மற்றும் விஜய் அண்பன் கல்லணை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் தலைமை தாங்கி கண்டன கோஷங்களை எழுப்பிய நிலையில்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கைகளில் கண்டன கோஷங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாரு சுட்டெரிக்கும் வெயிலிலும் காத்திருந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர்.

ஆர்ப்பாட்ட மேடையில் மாவட்டச் செயலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு உள்ளிட்டவைகளை எடுத்துக் கூறி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில்.
தமிழக வெற்றி கழகத்தின் நிலை உள்ளிட்டவைகள் கொடுத்து பேசிய நிலையில் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நிகழ்வின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக்கழக இணை பொதுச் செயலாளர் சிடி ஆர் நிர்மல் குமார் கூறுகையில்.
தமிழகம் முழுவதும் விஜய் கட்டளைக்கிணங்க சாதி வாரி கணக்கு எடுப்பு நடத்த கோரியும், திமுக அரசின் ஊழல்களை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்றம் கூறியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று. தமிழக மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனை இது.
நிர்வாகிகளை சந்திக்க நெருக்கடி ஏற்படுகிறதா என்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
இந்தியாவின் பெரிய சக்தியாக இருக்கும் எங்கள் தலைவர் விஜய்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் வரத்தான் செய்யும், எவ்வளவு பெரிய நெருக்கடிகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு தேர்தல் சந்திப்போம்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு??
நாங்கள் பலமுறை இது தொடர்பாக பேசி விட்டோம், இதுபோன்ற பேச்சுக்கள் எங்கிருந்து வெளியாகிறது என தெரியவில்லை.
இது தொடர்பாக நாங்களும் விளக்கம் அளித்து விட்டோம். அவர்களும் விளக்கம் அளித்து விட்டார்கள்.
எங்கள் தலைவர் விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை தயார் செய்து வருகிறார்.
விஜயை முதல்வராக ஏற்று யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வோம் என்பதில் எப்போதும் மாற்று கருத்து இல்லை.
40% மேலான மக்கள் விஜய்க்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
அழுத்தத்தின் பெயரில் தான் திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான கேள்விக்கு??

காங்கிரஸ் திமுக தொடர்பான பிரச்சனையை தாங்கள் யாரும் பேசவில்லை.
அது குறித்து பேசியவர் எம்எல்ஏ கோ தளபதி, ராஜ கண்ணப்பன் ஆகியோர் தாங்கள் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை.
எந்தவித பேச்சுவார்த்தையம் நடத்தவும் இல்லை. இது தொடர்பான வதந்திகளுக்கு ஏற்கனவே பதில் அளித்து விட்டோம்.
நீங்கள் மதுரையில் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பான கேள்விக்கு.
தலைவர் விஜய் எந்த தொகுதியை கை காட்டினாலும் அங்கு வேட்பாளராக களமிறங்குவோம்.
பாஜக தொடர்ந்து நெருக்கடி கொடுக்கிறதா என்பது தொடர்பான கேள்விக்கு
சினிமாவில் இருந்தே நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். இதை எல்லாம் தாண்டி தான் தலைவர் விஜய் களத்தில் வந்தார். இதையெல்லாம் சந்திக்க தயாராக தான் வந்தோம்.
இது சட்டசபைக்கான தேர்தல் இதற்கு பிரதான எதிரி திமுக. 30 கட்சிகளை கூட்டிக்கொண்டு ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். எனவே அவர்களை வலுவாக எதிர்த்து வருகிறோம்.
சிலிண்டர் விலை ஏறி வருகிறது அறிவித்தபடி ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு?
இது சாத்தியம் என்பதால்தான் தலைவர் விஜய் அறிவித்தார். கண்டிப்பாக 6 சிலிண்டர் இலவசமாக தர முடியும். அதேபோல் ரூ.2500 தர முடியும்.
இது தொடர்பாக நிதியை கணக்கிட்டு தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும் என்பது குறித்தும் இதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் ஏற்கனவே திட்டம் திட்டி உள்ளோம் என்றார்.

