புதுச்சேரியில் பெட்ரோல் தட்டுப்பாடு.பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிக்கும் பொதுமக்கள்..
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நடத்தி வரும் போரால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பெங்களூர், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வணிக சிலிண்டர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுவதாக நேற்று இரவு வதந்தி பரவியது.
இதனால் நேற்று நள்ளிரவு முதல் தற்பொழுது வரை புதுச்சேரி பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டுள்ளனர் .
நகரப் பகுதியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும்
பெட்ரோல் வாங்குவதற்கு வாகனங்களுடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் பலர் 25 லிட்டர் தண்ணீர் கேன் மற்றும் 10 லிட்டர் 5 லிட்டர் என கேன்களிலும் பாட்டில்களிலும் பெட்ரோலை வாங்க முண்டியடித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக தொடர்ந்து பெட்ரோலை நிரப்புவதற்கு ஏராளமான பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
போதிய இருப்பு உள்ளது என ஊழியர்கள் கூறினாலும் பங்குவை அதிக அளவில் வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
வழக்கமாக 100 ரூபாய்க்கு போடுபவர்கள் 1000 ரூபாய்க்கு போடுகின்றனர்..போதிய இருப்பு இன்னும் பல மாதங்களுக்கு உள்ளது என ஊழியர்கள் கூறினாலும் அச்சத்தின் காரணமாக அதிக அளவில் மக்கள் பெட்ரோல் போடுகின்றனர் ..


