சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தலைமை தபால் நிலையம் முன்பு,சிலிண்டர் தட்டுப்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 60 உயர்த்தியுள்ள மத்திய பாஜக அரசை கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர்.ரங்கபூபதி தலைமையில் நடைபெற்றது.
என் நிகழ்ச்சி கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் சில பேருக்கு மாலை அணிவித்தும் , சாலையில் மண் அடுப்பு வைத்து சமையல் செய்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


