தேங்கிய நெல்மூட்டைகளை இயக்கம் செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சித்தர்காட்டில் அமைந்துள்ளது டி.என்.சி.எஸ்.சி மண்டல அலுவலகம்.இந்த அலுவலகம் எதிரில் ஏ.ஐ.டி.யு.சி. சங்க நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர்கள் சிவகுருநாதன் மற்றும் சம்பத் தலைமை வகித்தனர்.மாநில பொதுசெயலாளர் சந்திரகுமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும்,கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய கோரியும், இயற்கையால் ஏற்படும் இழப்புகளுக்கு ஊழியர்களிடம்,ரெக்கவரி செய்வதை நிறுத்த கோரியும்.
தொழிலாளிகளுக்கு கூலியாக மூட்டைக்கு ரூ 15 வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 க்கு மேற்பட்ட நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்..

