விஜய்யை வறுத்தெடுத்த ஜூலி! அரசியலில் கிளம்பிய புதுப் புயல்!
பிக்பாஸ் புகழ் ஜூலி இப்போ சோசியல் மீடியாவுல செம ஹாட் டாபிக்!
கொஞ்ச நாளா தவெக தலைவர் விஜய்யை பத்தி பேசி ட்ரெண்ட் ஆகிட்டு இருந்த ஜூலி, இப்போ “வெல்லும் தமிழ் பெண்கள்” அப்படிங்கிற நிகழ்ச்சியில ரொம்பவே காட்டமா பேசியிருக்காங்க.
அந்த நிகழ்ச்சியில ஜூலி பேசும்போது, “நம்மள வளர்த்துவிட்ட இந்த திராவிட அரசை டெல்லியில இருந்து வர்ற சிபிஐ, ரெய்டு மூலமா பலவீனப்படுத்த நினைக்கிறாங்க.
அந்தப் பெரிய இயக்கத்தை வீழ்த்தப் பார்க்கிறாங்க. அதுக்கு எதிரா நான் குரல் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்”னு ஆரம்பிச்சாரு.
தொடர்ந்து பேசின ஜூலி, நேரடியாவே விஜய்யை அட்டாக் பண்ற மாதிரி சில விஷயங்களைச் சொன்னாரு:
“இப்போ நிறைய திரை தளபதிகள் அரசியலுக்கு வந்துட்டு இருக்காங்க. ஓட்டைப் பிரிச்சு எப்படியாவது இந்த மாநிலத்தைக் கைப்பத்திடலாம்னு கணக்குப் போடுறாங்க.
இதையே தான் மத்த மாநிலங்கள்லயும் செஞ்சிருக்காங்க. ஆனா, இங்க சிம்ம சொப்பனமா ஒருத்தர் இருக்காரு.. அவருதான் தளபதி மு.க.ஸ்டாலின்!
“ஜூலி இன்னும் அதிரடியா, “இது தமிழ்நாடு, இது ஒரு திராவிடக் கோட்டை! எந்த ஸ்டார் கடப்பாரையை கொண்டு வந்தாலும் இந்தக் கோட்டையை அசைக்கக் கூட முடியாது.
இந்தக் கோட்டைக்கு முன்னாடி எங்கள மாதிரி சின்னச் சின்ன தடுப்புகள் (barricades) நிக்குறோம். எங்களையே உங்களால தாண்ட முடியாது”னு சவால் விட்டிருக்காரு.
கடைசியா, “நீங்க எவ்வளவு வேணா அவதூறு பரப்புங்க, எங்களோட கேரக்டரை தப்பா பேசுங்க.. நாங்க எதுக்கும் பயப்பட மாட்டோம்”னு திமுக-வுக்கு தன்னோட ஆதரவை கெத்தா பதிவு பண்ணிருக்காரு.
ஜூலியோட இந்தப் பேச்சு இப்போ தவெக தொண்டர்கள் மத்தியில பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கு.
தளபதி ரசிகர்கள் இதுக்கு எப்படி பதிலடி கொடுக்கப் போறாங்கன்னு தான் இப்போ பெரிய எதிர்பார்ப்பு!

