65 இலட்ச ரூபாய் மதிப்பிலான 6186 கிலோ புகையிலை பொருட்களை அழிக்கும் நிகழ்வு நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினரால் கடந்த 2021 – ஆம் ஆண்டு முதல் 2026 வரை 26 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முழுவதுமாக அழிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நாகை நகராட்சி குப்பை கிடங்கில் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6186.162 கிலோ புகையிலை பொருட்களை நீதிமன்ற உத்தரவு படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா பாலகிருஷ்ணன் முன்னிலையில் பள்ளம் வெட்டி பாதுகாப்பான முறையில் புதைத்து அழிக்கப்பட்டது.


