in

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை

 

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வரும் மார்ச் 6 ம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கும்: பருவகாலநிலை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் கட்டணத்தை குறைத்து மீண்டும் இயக்குவதாக கப்பல் நிர்வாகம் அறிவிப்பு.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கப்பல் சேவை வடகிழக்கு பருவமழையின் காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து வருகின்ற மார்ச் 6 ம் தேதி் முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இரு வழி பயணத்திற்கு முன்பு 9700 ரூபாயிலிருந்து 8,500 ரூபாயாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பயணத்தின் போது 10 கிலோ வரை இலவச சுமை அனுமதிக்கப்படும் எனவும், பயணிகளுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும் எனவும், செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்திற்கு ஆறு நாட்கள் கப்பல் சேவை இனி இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

What do you think?

மரக்காணம் அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை விழா

மின் கம்பத்தில் சிக்கிய நாகப்பட்டினம் அகஸ்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்