in

வெறும் ‘நடிகை’ மட்டும் இல்ல இப்ப ஒரு ‘ரோல் மாடல்’

வெறும் ‘நடிகை’ மட்டும் இல்ல இப்ப ஒரு ‘ரோல் மாடல்’

 

தென்னிந்திய சினிமாவோட ‘குயின்’னா அது நம்ம சமந்தா தான். ஆனா கடந்த சில வருஷங்களா அவங்க வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு மாதிரி ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களைச் சந்திச்சிருக்கு.

நோய் ஒரு பக்கம், தனிப்பட்ட வாழ்க்கையில பிரிவினு மனுஷி ரொம்பவே உடைஞ்சு போயிருந்தாங்க. ஆனா இப்போ எல்லாத்தையும் உதறிட்டு ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்திருக்காங்க! உடல்நலப் பிரச்சினை (Myositis) வந்தப்போ, ‘இனி சமந்தாவால நடிக்க முடியுமா?’னு நிறைய பேர் கேள்வி கேட்டாங்க. ஆனா சாம் அசரல.

கொஞ்ச காலம் சினிமாவ விட்டு விலகி இருந்தாலும், ஜிம்முல ஒர்க் அவுட் பண்றது, வெளிநாடுகளுக்குப் பயணம் போறதுன்னு தன்னைத் தானே செதுக்கிக்கிட்டாங்க.

இப்போ அதோட பலனா, ‘மா இந்தி பங்காரம்’னு ஒரு தெலுங்கு படத்துல செம ஸ்ட்ராங்கான ரோல்ல நடிக்க கமிட் ஆகியிருக்காங்க.

சமீபத்துல ஒரு பேட்டியில சமந்தா ரொம்ப ஓப்பனா ஒரு விஷயத்தைப் பேசிருக்காங்க மச்சான். விவாகரத்துக்கு அப்புறம் அவங்க மனசளவுல ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க.

“இனிமேல் யாரையுமே நம்ப முடியாது, காதலே வேணாம்னு நினைச்சேன்”னு சொன்னது கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அந்த இருண்ட காலத்துல சமந்தாவுக்குப் பெரிய துணையா இருந்தது டைரக்டர் ராஜ் நிதிமோரு தானாம். “அவரோட புரிதலும் நட்பும் தான் எனக்கு வாழ்க்கையில மறுபடியும் நம்பிக்கையைத் தந்துச்சு”னு சாம் நெகிழ்ச்சியா சொல்லிருக்காங்க.

இது காதலா இல்ல நட்பான்னு நெட்டிசன்ஸ் ஒரு பக்கம் ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாலும், சமந்தாவுக்கு அவர் ஒரு ‘பெரிய சப்போர்ட்’ன்றது மட்டும் தெளிவா தெரியுது.

உடல்நலக் குறைவு, ரிலேஷன்ஷிப் பிரேக்கப், சினிமா கேப்னு எல்லா தடைகளையும் உடைச்சுட்டு இப்போ சமந்தா நிக்கிறாங்க பாரு… அங்க நிக்குது கெத்து!

இப்போ அவங்க வெறும் ‘நடிகை’ மட்டும் இல்ல, எவ்வளோ பெரிய அடி விழுந்தாலும் திருப்பி எழுந்து வரலாம்னு காட்டுற ஒரு ‘ரோல் மாடல்’.

ரசிகர்களும் அவங்க படத்தைப் பார்க்க ரொம்ப ஆவலா இருக்காங்க. ஒரு புது நம்பிக்கையோட சமந்தாவோட ‘செகண்ட் இன்னிங்ஸ்’ இப்போ ஆரம்பமாகிருச்சு.

What do you think?

செஞ்சியில் பாஜக தேர்தல் அறிக்கை மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

நல்லகண்ணு அவர்களின் வீரவணக்க நிகழ்ச்சி