in

 அண்ணாமலையா எல்லாரையும் கவர்ந்துட்டு இருக்குறவர்- ‘சிறகடிக்க ஆசை’ 

 அண்ணாமலையா எல்லாரையும் கவர்ந்துட்டு இருக்குறவர்- ‘சிறகடிக்க ஆசை’ 

 

விஜய் டிவியோட ‘சிறகடிக்க ஆசை’ சீரியல்ல அண்ணாமலையா எல்லாரையும் கவர்ந்துட்டு இருக்குறவர் தான் நம்ம டைரக்டர் ஆர். சுந்தர்ராஜன்.

அவர் இப்போ ஒரு பேட்டியில அவரோட நெருங்குன நண்பன் பாக்யராஜ் பத்தி மனசு திறந்து பேசியிருக்காரு. அவங்க ரெண்டு பேரும் ஒன்னாம் கிளாஸ்ல இருந்தே ஒன்னா படிச்ச பெஸ்ட் பிரண்ட்ஸாம்டா! ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து தான் சினிமாவுல ஜெயிக்கணும்னு சென்னைக்கு வர்றாங்க.

பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டன்டா சேர ஒரு வாய்ப்பு கிடைச்சப்போ, சுந்தர்ராஜன் தான் பெரிய மனசு பண்ணி பாக்யராஜை அனுப்பி வச்சிருக்காரு. ‘அவன் ஜெயிச்சா நானும் ஜெயிச்சிருவேன்’னு ஒரு நம்பிக்கை.

ஆனா, பாக்யராஜ் ‘புதிய வார்ப்புகள்’ படத்துல ஹீரோவா கமிட் ஆனப்போ ஒரு சம்பவம் நடக்குது. ஒரு நாள் நைட்டு சுந்தர்ராஜனை தனியா விட்டுட்டு சொல்லாம கொள்ளாம கிளம்பி போயிட்டாராம் பாக்யராஜ். காலையில எழுந்து பார்த்தா அங்க ஒரு லெட்டர் மட்டும் தான் இருந்துருக்கு.

அதுல “நீ ஊருக்கு போயி கடையை பாத்துக்கோ, நான் படம் பண்ணும்போது உன்னை கூப்பிடுறேன்”-னு பாக்யராஜ் எழுதினது சுந்தர்ராஜனை செமயா காயப்படுத்திருச்சு.

சுந்தர்ராஜன் உடனே ஒரு லெட்டர் வாங்கி, நடுவுல பெருசா ‘நன்றி’-ன்னு ஒரே ஒரு வார்த்தையை மட்டும் எழுதி பாக்யராஜுக்கு அனுப்பிட்டாராம். “அவன் வாழ்க்கையில நான் குறுக்கீடு பண்ணுவேன்னு அவன் நினைச்சிருக்கலாம், ஆனா அவன் போனதுனால என் வாழ்க்கையே போச்சுன்னு அந்த வயசுல நான் ரொம்ப பீல் பண்ணேன்”னு சுந்தர்ராஜன் சொல்றாரு.

கொஞ்ச வருஷம் கழிச்சு, பாக்யராஜ் பெரிய ஸ்டார் ஆயிட்டாரு. ஒரு நாள் சுந்தர்ராஜன் மவுண்ட் ரோட்டுல பசியோட நடந்து போயிட்டு இருந்திருக்காரு. அப்போ ஒரு பென்ஸ் கார் வந்து நிக்குது… உள்ள இருக்குறது நம்ம பாக்யராஜ்! “வா மச்சான், உன்னை டிராப் பண்றேன்”னு கூப்பிட, சுந்தர்ராஜன் வரமாட்டேன்னு பிடிவாதமா சொல்லிருக்காரு.

பாக்யராஜ் விடாம “சரி, தேனாம்பேட்டை வரைக்கும் வரியா?”ன்னு கேக்க, சுந்தர்ராஜன் கோபத்துல ரோட்டுல கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்துட்டாராம். அதைப் பார்த்ததும் பாக்யராஜ் கிளம்பி போயிட்டாரு.

“எந்த ரோட்டுல ரெண்டு பேரும் பசியோட ஒன்னா நடந்து போனோமோ, அதே ரோட்டுல அவன் பென்ஸ் கார்ல போனான், நான் பசியோட நடந்து போனேன்”-னு அவர் சொல்லும்போது நிஜமாவே கண்ணு கலங்குது மச்சான்.

‘அவன் இவன்’னு உரிமையா கூப்பிடுற ஒரே ஆள் பாக்யராஜ் தான், ஆனா அந்த ஒரு சின்ன துரோகத்தால இன்னைக்கு வரைக்கும் சுந்தர்ராஜன் அவர் கூட பேசுறதே இல்லையாம். நட்புல வர்ற விரிசல் எவ்வளவு கஷ்டமானதுன்னு இந்த கதை சொல்லுதுல?

What do you think?

ரஜினியா? பற்றிப் பேசிய கேரள முதல்வர்! மோகன்லாலின் சுவாரசிய நேர்காணல் வெளிவந்த சீக்ரெட்! அதிரடி பதில்

மாசி மக தேர் திருவிழா – 4-ம் நாள் சோமேஸ்வரர் பூதக வாகனத்திலும், லட்சுமி நாரயணபெருமாள் பெரிய கருட சேவை வாகனம் திருவீதி உலா