திமுக என்னும் தீய சக்தியை விரட்டி அடிப்பேன் புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்த பின் விகே சசிகலா பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் காலி இடத்தில் வி.கே.சசிகலா தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய வி கே சசிகலா எம்ஜிஆர் மறைவின்போது ராணுவ வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை தள்ளிவிட்டபோது, ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்குவேன் என்று `சபதம்’ எடுத்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில்
பல பிரச்சினைகள். ஜெயலலிதாவின் பிறந்தநாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என இங்கு வந்துள்ளேன்”
அம்மாவுடன் கூட இருந்து நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்த ஆள் நான். 72 நாள் மருத்துவமனையில் இருந்தோம். நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு அழைத்து வர தயாராக இருந்தோம். யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென அட்டாக் வந்துவிட்டது . ஆனால் வெளியில் உள்ளவர்கள் என்னென்ன கதை எல்லாம் கட்டினார்கள். நான்தான் கொன்று விட்டதாக பேசினார்கள் என்றார்
நான்கு ஆண்டு காலம் தண்டனை என தீர்ப்பு வந்தது மறுநாள் மாலையே பெங்களூர் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஆகையால் அவசரமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் வரை சொல்லி இப்போது இருக்கிறார் அல்லவா இவரை முதலமைச்சராக ஆக்குவது என முடிவெடுத்தேன் அவர் பெயரைக் கூட இப்போது சொல்ல விரும்பவில்லை
பெயர் சொல்லும் அளவுக்கு கூட அவர் நல்லவர் இல்லை எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என பரோல் கேட்டோம் பெங்களூர் சிறைச்சாலை உடனடியாக 15 நாட்கள் அனுமதி அளித்தது ஆனால் சென்னை கமிஷனரிடமிருந்து அனுமதி வர வேண்டுமென பெங்களூர் சிறைச்சாலையில் கூறினார்கள்
ஆனால் இங்கே நான் உட்கார வைத்து விட்டுப் போனவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.பெங்களூரூ சிறையில் இருந்த போது சென்னை சிறைக்கு மாற்ற அதிமுக அமைச்சர்கள் சிலர் வற்புறுத்தினர்; நான் மறுத்து வரவில்லை; வந்திருந்தால் இன்று நான் இருந்திருப்பேனா? என்பது சந்தேகம் என்றார்
ஓபிஎஸ்-க்கு என்ன ஆச்சோ தெரியலை, தர்ம யுத்தம் என `அம்மா’ நினைவிடத்தில் உட்கார்ந்து விட்டார்.
யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் அப்படி செய்துவிட்டார். அந்த தர்ம யுத்தம் தான், இப்போது வரை ஓபிஎஸ்க்கு பிரச்சினையாக உள்ளது.
9 வருடங்கள் இருந்தது போல் இனிமேலும் நான் மவுனமாக இருந்தால், அது தமிழக மக்களுக்கு இழைக்கும் துரோகமாக அமைந்துவிடும். எனவே, தமிழக மக்களுக்காக, கழக தொண்டர்களுக்காக புதிய கட்சியை ஆரம்பிக்க போகிறோம். இது திராவிட கட்சியாக இருக்கும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், ஏழை எளிய சாமானிய மக்களின் கட்சியாக இது செயல்படும் என அண்ணா, எம்ஜிஆர, ஜெயலலிதா படத்துடன் கூடிய கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியை அறிமுகம் செய்துவைத்து கட்சியின் பெயரை விரைவில் அறிப்பதாக தெரிவித்துணன் எதிரிகளையும், துரோகிகளையும்
வேரறுக்கும்; திராவிட கட்சியாக செயல்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி கே சசிகலா திமுக என்னும் தீய சக்தியை விரட்டி அடிப்பேன் என தெரிவித்தார்.

