திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை ஒட்டி,விருத்தாசலத்தில் தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில்,திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததையொட்டி,கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் தேமுதிக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து முழுக்கமிட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகரத் தலைவர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஜானகிராமன்,ஒன்றிய செயலாளர் ஜெயராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் பாலு, வர்த்தக அணி செயலாளர் வெங்கடேசன், வர்த்தக அணி துணைச் செயலாளர் புகழ் மணி,மாவட்ட பிரதிநிதி மகேஷ்,பாலா,மலர் செந்தில், மலர் சரவணன்,நகர துணை செயலாளர் பாலமுருகன்,வட்ட செயலாளர் செந்தில்,நகர இளைஞரணி துணை செயலாளர் செந்தில், சின்னத்தம்பி,சௌந்தர்,பழனி, துரைமுருகன் ,கணேஷ் ,சிவகுருநாதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


