in

சிம்புவோட அதிரடி பேட்டி! விஜய்க்காக ஆதரவாக நிப்பேன்.அஜித்தை பார்த்தது சந்தோஷம்!”


Watch – YouTube Click

சிம்புவோட அதிரடி பேட்டி! விஜய்க்காக ஆதரவாக நிப்பேன்.அஜித்தை பார்த்தது சந்தோஷம்!”

 

நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு, அவரோட பிறந்தநாளை முன்னிட்டு (பிப்ரவரி 3) கொடுத்த பேட்டி இப்போ சோஷியல் மீடியால செம ட்ரெண்டிங்.

முக்கியமா விஜய் மற்றும் அஜித் பத்தி அவர் சொன்ன விஷயங்கள் தான் ஹைலைட்!

ஜெய்க்கு ஆதரவா சிம்பு போட்ட ட்வீட் பத்தி கேட்டப்போ, ரொம்ப தெளிவா பதில் சொல்லியிருக்காரு:

“ஜனநாயகன் படத்தையும் விஜய்யையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. இத்தனை வருஷம் சினிமாவுல உழைச்சிருக்காரு. அவரோட கடைசி படம் எந்த சிக்கலும் இல்லாம திரைக்கு வரணும். ஒரு சினிமா கலைஞனா அவருக்கு ஆதரவா நிக்க வேண்டியது என் கடமை”னு சொல்லிருக்காரு.

“அரசியல் பத்தி பேசுற அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது, நான் சரியான ஆளும் இல்ல. ஆனா விஜய்யோட அரசியல் எதிர்காலத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”னு முடிச்சுட்டாரு.

சமீபத்துல துபாயில அஜித்தை சந்திச்சது பத்தி சிம்பு ரொம்ப எக்சைட்மென்ட்டோட பேசினாரு: மலேசியாவுல ஒரு கடை ஓப்பனிங்கிற்கு போனப்போ, பக்கத்துலயே அஜித் சாரோட ரேஸிங் நடக்குறது தெரிஞ்சது.”அவரைப் பார்க்காம போகக்கூடாதுன்னு நினைச்சேன்.

அவர் வரச்சொன்ன பிறகு போய் பார்த்தேன். அஜித் சாருக்கு ரொம்ப சந்தோஷம். எனக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணி ரேஸிங் பத்தி ரொம்ப டீட்டெய்லா எனக்கு விளக்கிச் சொன்னாரு.

அந்த சந்திப்பு எனக்கும் ரொம்ப ஸ்பெஷல்”னு சொல்லியிருக்காரு சிம்பு. சிம்பு இப்போ வெற்றிமாறன் இயக்கத்துல ‘அரசன்’ படத்துல பிஸியா நடிச்சுட்டு இருக்காரு. இந்த படத்துக்காக ரசிகர்கள் ரொம்ப ஆவலா காத்துட்டு இருக்காங்க.


Watch – YouTube Click Shorts

What do you think?

திருவண்ணாமலை கடும் பனிப்பொழிவு

ஜனநாயகன் படம் விரைவில் வெளிவரும்?. திருச்செந்தூர்ல நம்ம எஸ்கே! ‘பதில்.. குடும்பத்தோட சாமி தரிசனம்!