in

பள்ளியில் 41-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி பரிசு வழங்கினார்

பள்ளியில் 41-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி பரிசு வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறையில் காந்திஜி சாலையில் அமைந்துள்ளது ஆதினத்திற்கு சொந்தமான தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியின் 41-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு    விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்து .

   

பரிசளிப்பு நிகழ்ச்சியும்,பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவுக்கு ஆட்சி மன்ற குழுவினர் முன்னிலை வகிக்க,பள்ளி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும்,கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்களுக்கும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி கார்த்திகேயன் பரிசுகளை வழங்கி சான்றிதழ்களும் வழங்கினர்.

விழாவில் 500,க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பள்ளி நிர்வாக செயலர் பாஸ்கரன் நன்றி தெரிவித்தார்.

What do you think?

ஸ்ரீதுங்க பாலஸ்தனும்பிகா சமேத காத்ரசுந்தரேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.