பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்- மலைக்கோயில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிப்பு
பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. பத்து நாட்கள் நடைபெறக்கூடிய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி 31ஆம், தேதியும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தைப்பூச திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது.

தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். பழனிக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பழனி மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடி முருகன் கோவில் கோபுரம் மற்றும் ராஜ கோபுரம் பல்வேறு வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பழனி மலை கோயில் வண்ண விளக்குகளால் மின்னுவதை பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் கண்டு மகிழ்கின்றனர்.
