திருவாடானை அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த டிராக்டர் ஓட்டுநர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, கொச்சி – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சின்னகீரமங்கலம் தனியார் மஹால் எதிரே உள்ள சிறிய பாலத்தில் இருந்து தவறி விழுந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில், அவர் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் முத்து என்பதும், அவர் டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. நேற்று இரவு பாலத்தின் வழியாகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்துத் தகவல் அறிந்த திருவாடானை காவல் ஆய்வாளர் சதீஸ்பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர், முத்துவின் உடல் உடற்கூறாய்வுக்காகத் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


