டைரக்டர்ஸ் கொஞ்சம் உஷாரா இருங்க! கதையை விட அதை எப்படிச் சொல்லப்போறோம்ங்கிற தான் முக்கியம்
இங்கிலாந்திலிருந்து சங்கர் அப்படிங்கிற ரசிகர், டைரக்டர் நலன் குமாரசாமி கார்த்திகிட்ட எப்படி கதை சொல்லியிருப்பாருன்னு ஒரு கற்பனையான உரையாடலோட ஆரம்பிச்சிருக்காரு:
நலன்: “சார், இது ஒரு ஹாலிவுட் ‘பேட்மேன்’ ரேஞ்சுக்கு சூப்பர் ஹீரோ படம் சார். காலையில நீங்க ஒரு போலீஸ் மேன், ஆனா நைட்டானா சூப்பர் ஹீரோ!”
கார்த்தி: “நல்லா இருக்கே.. ஆனா சூப்பர் ஹீரோனா பேட்மேன் மாதிரி காஸ்டியூம், மாஸ்க் எல்லாம் வேணுமே?”
நலன்: “சார், அதான் மேட்டர்.. நீங்க போலீஸ் டிரஸ் கழட்டிட்டு எம்ஜிஆர் கெட்டப்ல வந்து அதிரடி பண்ணுவீங்க!”
கார்த்தி: “யாருமே யோசிக்காத ஐடியாவா இருக்கே.. பண்ணிடலாம்!” – இப்படித்தான் இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிச்சிருக்கும்னு அவர் சொல்றாரு.
“கார்த்தி திடீர்னு எம்ஜிஆர் கெட்டப்ல வர்றதைப் பார்க்க ஆரம்பத்துல கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தாலும், போகப் போக ரசிக்கிற மாதிரிதான் இருந்துச்சு.
நலனோட ஐடியா சூப்பர்!”ஐடியா நல்லா இருக்கு, ஆனா அதை உருப்படியா கொண்டு போக ஸ்ட்ராங்கான கதை இல்லை. படம் இப்போதான் சூடுபிடிக்குதுன்னு நினைக்கும்போது டக்குனு முடிஞ்சுடுது.
“சங்கர் இன்னைக்கு இருக்கிற இயக்குனர்களோட பெரிய தப்பா ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுறாரு: “90-களில் இருந்த இயக்குனர்கள் 3 மணி நேரத்துக்கு என்ன கதை சொல்லணுமோ அதைத் தெளிவா ப்ளான் பண்ணுவாங்க. ஆனா இன்னைக்கு இருக்குறவங்க 7 மணி நேரத்துக்கு ஷூட் பண்ணிட்டு, அதை 3 மணி நேரமா சுருக்குறதுக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க.
“”கதையை விட அதை எப்படிச் சொல்லப்போறோம்ங்கிற திட்டமிடல் ரொம்ப முக்கியம். டைரக்டர்ஸ் கொஞ்சம் உஷாரா இருங்க!”

